ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கௌரி நோன்பு விரத பூர்த்தி விழா!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கௌரி நோன்பு விரத பூர்த்தி விழா!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரின் எண் 19 சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் நாளை (நவ.13) கௌரி நோன்பு விரத பூர்த்தி (Gowri Nonpu Viratha Poorthi) விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.

‘ஸ்ரீ சிவன் கோயிலில், ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்புப் பூஜைகள்’ நடைபெறும் என அறிவிப்பு!

நவம்பர் 13- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு ஸ்ரீ சதாசிவன் அம்பாளுக்கு ருத்ராபிஷேகம், மாலை 06.30 மணிக்கு மூலவருக்கு விசேட சாயரட்சைப்பூஜை, இரவு 07.00 மணிக்கு வசந்தமண்டபப் பூஜை, இரவு 07.15 மணிக்கு அடியார்கள் பங்குபெறும் கௌரி நோன்பு விரத பூர்த்தி பூஜை, இரவு 08.15 மணிக்கு மனோன்மணி அம்பாள் சமேத சதாசிவப்பெருமாள் திருவீதி எழுந்தருளல், இரவு 08.30 மணிக்கு காளாஞ்சி, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்!

இந்த பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் 6345-8176 என்ற ஆலய அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம். சிவலிங்க பூஜையில் கலந்துக் கொள்ளும் பக்தர்கள் 51 வெள்ளியை கட்டணமாக செலுத்த வேண்டும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.