தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்!

தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வரும் சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள்!
Photo: LISHA

 

இன்று (நவ.12) தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூர் முழுவதும் உள்ள சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். புத்தாடைகளை உடுத்திக் கொண்டு, அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

விபத்தில் ஆடவர் & சிறுவன் மரணம்: மோதிவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநர் கைது

அதைத் தொடர்ந்து, குடும்பத்துடன் சிங்கப்பூரில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிட்டு, தீபாவளி திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். இதனால் சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ளது என்றே கூற வேண்டும். லிட்டில் இந்தியாவில் ‘லிஷா’ அமைப்பு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

‘ஸ்ரீ சிவன் கோயிலில், ஸ்ரீ கந்தசஷ்டி சிறப்புப் பூஜைகள்’ நடைபெறும் என அறிவிப்பு!

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி, சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கு அதிபர் தர்மன் சண்முகரத்தினம், பிரதமர் லீ சியன் லூங், உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா.சண்முகம், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் உள்ளிட்டோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.