‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் மாசி மாத விநாயகர் சதுர்த்தி விழா!- பக்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு நடைபெறும் என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் நாளை (பிப்.13) மாசி மாத விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய அதிபர் தேர்தலையொட்டி, சிங்கப்பூரில் உள்ள இந்தோனேசியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்!

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் (Ceylon Road) அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் நாளை (பிப்.13) செவ்வாய்க்கிழமை அன்று மாசி மாத விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது. அதன்படி, நாளை (பிப்.12) மாலை 05.30 மணிக்கு விநாயகருக்கு சங்கல்ப்பமும், விநாயகப் பெருமானுக்கு விசேட அபிஷேகமும், இரவு 07.00 மணிக்கு மூலஸ்தான விசேட பூஜையும், இரவு 07.30 மணிக்கு வசந்தமண்டபப் பூஜையும், விநாயகப்பெருமான் திருவீதி உலாவும், இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூஜையும், அதைத் தொடர்ந்து பிரசாதமும் வழங்கப்படும்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த இந்தியருக்கு சிறை – தன் கடமையை தவறியதாக குற்றம் நிரூபணம்

இந்த பூஜையில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விநாயகரைத் தரிசித்து, பிரசாதம் பெற்றுக் கொண்டு செல்லுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.