‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழா- 2023’!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு நடைபெறும் என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள 19 சிலோன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் வரும் நவம்பர் 14- ஆம் தேதி முதல் நவம்பர் 19- ஆம் தேதி வரை அருள்மிகு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழா (Skanda Shashti Vizha) சிறப்பாக நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கட்டுமான தளத்தில் அதிக இரைச்சல்.. மெத்தையை வைத்து ஜன்னலை மூடும் குடியிருப்பாளர்களின் நிலை

மேற்கண்ட நாட்களில் காலை 07.30 மணிக்கு சகஸ்ரநம அர்ச்சனையும், சுந்தர் அலங்கார பாராயணமும், காலை 09.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், நண்பகல் 12.00 மணிக்கு உச்சிக்காலபூஜையும், மாலை 05.30 மணிக்கு விநாயகப்பெருமானுக்கு ருத்ராபிஷேகமும், கந்தர் அனுபூதி பாராயணத்துடன் முருகப் பெருமானுக்கு திரவிய அலங்கார ஸ்நபன அபிஷேகமும், இரவு 07.00 மணிக்கு விசேடபூஜை தொடர்ந்து வசந்தமண்டப பூஜையும், அறுபடை வீடு கவசபாராயணமும், இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப்பூஜையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.

மதுபோதையில் இருந்த ஆடவர் மீது செருப்பு, துடைப்பங்களை வீசி, கழிவுகளை ஊற்றிய இளையர்கள் குழு – யார் அந்த ஆடவர்?

நவம்பர் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் மாலை 05.30 மணிக்கு, மாலைப்பூஜையும், மாலை 05.55 மணிக்கு சங்கல்ப்பமும், பூர்வாங்க கிரியையும், மாலை 06.30 மணிக்கு ஸ்ரீ முருகன் திருக்கல்யாணமும், திருவூஞ்சலும், இரவு 08.15 மணிக்கு விநாயகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ முருகப்பெருமான் திருவீதியுலாவும், இரவு 09.00 மணிக்கு அர்த்தசாம்பூஜையும் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.