‘ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா’- பக்தர்களுக்கு அழைப்பு!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் திருவிளக்கு நடைபெறும் என அறிவிப்பு!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

வரும் ஜனவரி 25- ஆம் தேதி ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் (Sri Senpaga Vinayagar Temple) தைப்பூசத் திருவிழா (Thaipusam Festival) நடைபெறும் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

லாரியுடன் விபத்து.. ஒருவர் மரணம் – அதிர்ச்சியில் உறைந்துபோன வெளிநாட்டு ஊழியர்

சிங்கப்பூரில் உள்ள சிலோன் சாலையில் (Ceylon Road) அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் வரும் ஜனவரி 25- ஆம் தேதி வியாழன்கிழமை தைப்பூசத் திருவிழா நடைபெறவுள்ளது. தைப்பூசத் தினத்தன்று காலை 07.30 மணிக்கு சங்கல்பமும், ஸ்கந்த ஹோமமும், காலை 08.45 மணிக்கு முருகப்பெருமானுக்கு அபிஷேகமும், காலை 09.00 மணிக்கு பக்தர்கள் கலந்து கொள்ளும் பால்குட ஊரவலமும், காலை 09.15 மணிக்கு பிரதான கும்பம் புறப்பாடும், காலை 09.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு விஷேச பூஜையும், காலை 09.45 மணிக்கு காளாஞ்சி வழங்குதலும், பிரசாதம் வழங்குதலும் நடைபெறுகிறது.

அதேபோல், மாலை 06.00 மணிக்கு சாயரட்சை பூஜையும், மாலை 06.15 மணிக்கு ஸ்ரீ நடராஜருக்கு விஷேச பூஜையும், மாலை 06.40 மணிக்கு மங்கள இசையும், மாலை 06.50 மணிக்கு நடராஜர் இசை ஆராதனையும் நடைபெறவுள்ளது.

thaipusamNTU தங்கும் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்த வெளிநாட்டு ஆடவர் மீது குற்றச்சாட்டு

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தைப்பூசத் திருவிழாவைச் சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.