ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா!

ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா!
Photo: Sri Senpaga Vinayagar Temple

 

சிங்கப்பூரில் உள்ள 19 சிலோன் சாலையில் (19 Ceylon Road) அமைந்துள்ளது ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம் (Sri Senpaga Vinayagar Temple). இந்த ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சதுர்த்தி பெருவிழா (Vinayagar Chathurthi Grand Festival-2023) நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

லைஃப்ஸ்டைல்​, டிராவல் பொருட்களுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி – இப்போதே முந்துங்கள்

அதன்படி, செப்டம்பர் 14- ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 18- ஆம் தேதி வரை காலையும், மாலையும் இலச்சார்ச்சனை, மூலமந்திரஹோமம், திருமுறைப்பாராயணம் மற்றும் ஆசிர்வாதம் நடைபெறும். விநாயகர் சதுர்த்தி நாளான வரும் செப்டம்பர் 19- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று மஹா கணபதி ஹோமமும், 1008 சங்காபிஷேகமும், 108 விநாயகர் பூஜையும், பூர்ணாஹூதி, பால்குட அபிஷேகமும், பஞ்சமுக விநாயகர் 108 சங்காபிஷேகமும், மோத பூஜை, பஞ்சமுகார்ச்சனை விசேட விநாயகர் அர்ச்சனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.