ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் பிரம்மோத்சவம் பூஜை!

singapore-no-religion-believe-karma-god
File Image

சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் ரைஸ் சாலையில் (Marsiling Rise) அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் வரும் ஏப்ரல் 25- ஆம் தேதி முதல் மே 7- ஆம் தேதி வரை பிரம்மோத்சவம் பூஜைகள் (Brahmothsavam Prayers) நடைபெறும் என ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு திடீரென நின்றுபோன இதயத்துடிப்பு – வறுமையில் உள்ள குடும்பத்தை காப்பாற்ற வந்த அவருக்கு ஏற்பட்ட அவலம்

இந்த பிரம்மோத்சவத்துடன் இணைத்து ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில், வரும் மே 6- ஆம் தேதி சனிக்கிழமை அன்று வெள்ளித் தேர் ஊர்வலம் நடைபெறும். உட்லண்ட்ஸ் எஸ்டேட்டிற்கு (Woodlands Estate) உட்பட்ட மார்சிலிங் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (Marsiling Industrial Estate), பிளாக் 22, 848, 714, 787, 640, 579A, 370A, 316 ஆகிய இடங்களில் நிறுத்தப்படும்.

போலி இ-விசா இணையதளங்கள்…. இந்திய தூதரகம் எச்சரிக்கை!

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 6368 0030 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொண்டு பேசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.