ஸ்ரீ சிவ கிருஷ்ண கோயிலின் வெள்ளி தேர் ஊர்வலத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் லாரன்ஸ் வோங்!

Photo: Minister Lawrence

 

சிங்கப்பூரில் உள்ள மார்சிலிங் ரிஸ் சாலையில் (31 Marsiling Rise Road) அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண கோயில் (Sri Siva Krishna Temple). இந்த கோயிலில், கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள், சுவாமி புறப்பாடு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்தது.

இந்தியாவை போன்று இனி சிங்கப்பூரிலும் வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பலாம் – புதிய அம்சம் அறிமுகம்

குறிப்பாக, 108 கலசாபிஷேகப் பூஜைகள், பூர்ணாஹூதி யாக சாலை பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மே 7- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவ கிருஷ்ண கோயிலுக்கு சிங்கப்பூர் துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது ஆகியோர் வருகை புரிந்தனர்.

அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கோயிலில் சுவாமியை வழிபட்டனர். பின்னர், அவர்களுக்கு பொன்னாடை மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக இந்தோனேசியாவில் தரையிறக்கம்!

அப்போது அங்கிருந்த பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடிய அமைச்சர் லாரன்ஸ் வோங், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பின்னர், வெள்ளி தேர் ஊர்வலத்தை அமைச்சர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார்.