இந்தியாவை போன்று இனி சிங்கப்பூரிலும் வாட்ஸ்ஆப் மூலம் பணம் அனுப்பலாம் – புதிய அம்சம் அறிமுகம்

WhatsApp launches in-chat payments for Singapore

சிங்கப்பூரில் உள்ள வாட்ஸ்ஆப் பயனர்கள் இனி புதிய in-chat அம்சத்தின் மூலம் பணம் செலுத்த முடியும்.

அதாவது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்ஆப் எண் மூலமாக சில உள்ளூர் வணிகங்களுக்கு பணம் செலுத்த முடியும்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற புதுக்கோட்டை ஊழியர் கைது

இது நேற்று செவ்வாய்க்கிழமை (மே 9) முதல் வாட்ஸ்ஆப் செயலியில் அறிமுகம் ஆகியுள்ளது. தேவை இருப்பின் இனி இதன் மூலம் பணம் செலுத்தி கொள்ளலாம்.

வேறு இணையதளங்களுக்கு செல்லாமலே, வாடிக்கையாளர்களும் வணிகங்களும் நேரடியாக வாட்ஸ்அப்பில் வாங்கவும் விற்கவும் இந்த அம்சம் உதவும்.

இந்த அம்சம் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சில வணிகங்களுக்கு மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. வரும் நாட்களில் விரிவுப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்றாலும், ஒரே payament இல் செலுத்த முடியும் என்பது இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

விசா, மாஸ்டர்கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் அல்லது PayNow ஆகியவற்றை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

இந்த சேவை இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெயில் காலம் வந்துருச்சி.. வெப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை – MOM வெளியிட்ட அறிக்கையால் மகிழ்ச்சி