மஹா சிவராத்திரியையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலில் சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் வழிபாடு!

Photo: Minister One yi kung Official Facebook Page

சிங்கப்பூரில் உள்ள கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ-2ல் (24 Geylang East Ave 2) அமைந்துள்ளது ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயிலில் பிப்ரவரி 18- ஆம் தேதி அன்று மஹா சிவராத்திரி விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பிப்ரவரி 18- ஆம் தேதி அன்று மாலை 06.00 மணி முதல் பிப்ரவரி 19- ஆம் தேதி அன்று அதிகாலை 04.00 மணி வரை சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமான சேவை- மார்ச் முதல் ஜூலை வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில், பெரும்பாலானோர் பால் குடங்களுடன் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Photo: Minister Ong Ye Kung Official Facebook Page

விழாவில் சிறப்பு விருந்தினராக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யீ காங் (Minister Of Health, Ong Ye Kung) கலந்துக் கொண்டார். சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம் சார்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Photo: Minister Ong Ye Kung Official Facebook Page

அதைத் தொடர்ந்து, பால்குடம் காணிக்கை செலுத்திய அமைச்சர், சாமி தரிசனம் செய்தார். பின்னர், அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

அரசுமுறைப் பயணமாக சீனாவுக்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்!

அதன் தொடர்ச்சியாக, கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.