மே 27- ஆம் தேதி அன்று ஸ்ரீ சிவன் கோயிலில் பிரதோஷ பூஜை!

Photo: Sri Sivan Temple

சிங்கப்பூரில் பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்று ஸ்ரீ சிவன் கோயில் (Sri Sivan Temple). இந்த கோயில் 24 கெய்லாங் ஈஸ்ட் அவென்யூ 2- ல் (24 Geylang East Avenue 2) அமைந்துள்ளது. இக்கோயிலில் பிரதோஷ நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வந்துவிட்டதா? – வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் முறை

அந்த வகையில், இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஸ்ரீ சிவன் கோயிலில் வரும் மே 27- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷ பூஜை நடைபெறும். அந்த நாளில், மாலை 04.20 மணி முதல் மாலை 05.45 மணி வரை, எந்நேரமும் 200 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். அபிஷேகப் பொருட்களுக்கும், வில்வ அர்ச்சனைக்கும் பக்தர்கள் http://sst.org.sg/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்யலாம்.

உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் அபிஷேகப் பொருட்களையும், வில்வ அர்ச்சனையையும் செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து பிரதோஷப் பூஜையைப் பார்க்க முடியும். கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். இந்த மாற்றங்களின் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பையும், புரிந்துணர்வையும் நாடுகிறோம்.

எவ்வளவு காலம் மலேசியாவில் கோழி ஏற்றுமதி தடை? – சிங்கப்பூர் கோழி சப்ளையர்கள் கவலை

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயிலின் அலுவலக தொலைபேசி எண்ணை அழைக்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.