ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவம்!

Photo: Sri Srinivasa Perumal Temple

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “சிங்கப்பூரில் சிராங்கூன் சாலையில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) பிரம்மோத்சவம் மார்ச் 20- ஆம் தேதி முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முழுமையாகத் தடுப்பூசிப் போட்டுக் கொண்ட பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர். மார்ச் 20- ஆம் தேதி முதல் ஏப்ரல் 1- ஆம் தேதி வரை, அபிஷேகப் பொருட்களை நேர்த்திக் கடனாக செலுத்த, தினமும் பக்தர்கள் கோயிலில் வாங்கிக் கொள்ளலாம்.

சிங்கப்பூரில் 2 வருட இடைவெளிக்குப் பிறகு, கோலாகலமாக தொடங்கிய “நோன்பு பெருநாள் ஒளியூட்டு விழா”

ஏப்ரல் 1- ஆம் தேதி அன்று காலை 07.00 மணி முதல், 108 கலச திருமஞ்சனம் செலுத்த விரும்புவோர் சீட்டுகளை கோயில் அலுவலகத்தில் வாங்கிக் கொள்ளலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் 108 கலசங்களை செலுத்திவிடுவார்கள். பக்தர்கள் கோயிலில் அமர்ந்து கலச திருமஞ்சனப் பூஜையைக் காணலாம்.

கோயில் வளாகத்தில் அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் தங்களது முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். மேல் விவரங்களுக்கு 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

அதேபோல், ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு, ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வரும் ஏப்ரல் 9, 10 ஆகிய நாட்களில் மாலை 06.30 மணி முதல் இரவு 07.30 மணி வரை சிறப்பு சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.