ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் வசந்த உத்சவம்!

Google Maps

சிங்கப்பூரில் உள்ள கோயில்களில் பிரசித்திப் பெற்றது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். இக்கோயில் செராங்கூன் சாலையில் அமைந்துள்ளது. அனைத்து விஷேச நாட்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. இக்கோயில் நிர்வாகம், இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

நீண்டகால நட்பு நீடிக்குமா? – சிங்கப்பூர், ஜப்பான் இடையேயான உறவு குறித்து விவாதம் செய்த பிரதமர்கள்

இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “ஸ்ரீ ஸ்ரீநிவாசாப் பெருமாள் கோயிலில் வரும் ஜூன் 13- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதி வரை வசந்த உத்சவம் நடைபெறவுள்ளது. இதில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. கோயில் வாத்திய கலைஞர்களின் மங்கள இசை மற்றும் வாத்திய இசையுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சி, ஹரிக் கதை மற்றும் பாட்டு, கதையுடன் நிறைவு பெறுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம், பாரம்பரிய நடனம், குச்சிப்புடி நடனம், சொற்பொழிவு, வீணைக் கச்சேரி உள்ளிட்டவையும் இடம்பெறுகிறது. இது குறித்த நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட மேலும் விவரங்களுக்கு https://heb.org.sg/ என்ற இந்து அறக்கட்டளை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோயில் நிர்வாகத்தின் 62985771 என்ற தொலைபேசி எண்ணையும் அழைக்கலாம்.

உலகிலேயே வளர்ப்பு கோழி இறைச்சிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு எது தெரியுமா? – ஆசியாவிலேயே மிகப்பெரிய கோழி வளர்ப்பு ஆய்வகம்

இந்த நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஜூன் 13- ஆம் தேதி முதல் ஜூன் 21- ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 06.45 PM மணிக்கு உபயா பூஜையும், பிறகு மாலை 07.15 PM மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.