‘ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி 2024!’

'ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி 2024!'
Photo: Hindu Endowments Board

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் (Sri Srinivasa Perumal Temple) ‘ரத சப்தமி 2024’ (𝐑𝐚𝐭𝐡𝐚 𝐒𝐚𝐩𝐭𝐡𝐚𝐦𝐢 2024) நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) தெரிவித்துள்ளது.

வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி

சிங்கப்பூரில் செராங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில். இந்த கோயிலில் இன்று (பிப்.16) ‘ரத சப்தமி 2024’ நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 16- ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் காலை 08.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்டுள்ள சூர்ய பிரபாய் வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதேபோல், காலை 10.15 மணிக்கு சேஷா வாகனத்திலும், நண்பகல் 12.00 மணிக்கு கருடா வாகனத்திலும், மதியம் 01.00 மணிக்கு ஹனுமன் வாகனத்திலும் பெருமாள் அமர்ந்து திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தல்….கோவை விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் சிக்கிய பயணி!

இன்று மாலை 05.45 மணிக்கு கஜ வாகனத்திலும், இரவு 07.30 மணிக்கு குதிரை வாகனத்திலும், இரவு 08.45 மணிக்கு புஷ்ப வாகனத்திலும் பெருமாள் அமர்ந்த படி, திருவீதி உலா வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.