ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் நடந்த மஹா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள்!

Photo: Minister Edwin Tong

 

 

சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் ஒன்றாகவும், பழமையான கோயில்களில் ஒன்றாகவும் விளங்குகிறது ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் (Sri Thendayuthapani Temple).

Photo: Minister Edwin Tong

இந்த கோயில், டேங்க் சாலையில் (15 Tank Road) அமைந்துள்ளது. ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த ஓராண்டு காலமாக ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

சிங்கப்பூரில் கடுமையாகும் சட்டம் – ஜூன் முதல் அமல்: மீறினால் 30 ஆண்டுகள் சிறை, 15 பிரம்படி

Photo: Minister Edwin Tong

புனரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், ஜூன் 1- ஆம் தேதி காலை 09.00 மணி முதல் காலை 10.00 மணிக்குள் ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோபுரக் கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

Photo: Minister Edwin Tong

லாரன்ஸ் வோங் தற்காலிக பிரதமராக செயல்படுவார் என அறிவிப்பு!

மஹா கும்பாபிஷேக விழாவில், சிங்கப்பூரின் சட்டத்துறை மற்றும் உள்துறை அமைச்சர் கா.சண்முகம், அமைச்சர் எட்வின் டோங் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுக்கு கோயிலில் நிர்வாகம் மற்றும் இந்து அறக்கட்டளை வாரியம் சார்பில் பொன்னாடைப் போர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர்கள் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.