ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்….. பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது இந்து அறக்கட்டளை வாரியம்!

ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்..... பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது இந்து அறக்கட்டளை வாரியம்!
Photo: HEB

 

 

சிங்கப்பூரில் டேங்க் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயில். சுமார் 164 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில், எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஜம்பு விநாயகர், அருள்மிகு தெண்டாயுதபாணி, அருள்மிகு சுந்தரேஸ்வரர், அருள்மிகு மீனாட்சியம்மன், நவக்கிரகம் முதலான பரிவாரமூர்த்திகளுக்கும் நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 18, ஜூன் 1- ஆம் தேதி வியாழன்கிழமை அன்று சுக்லபட்சம் துவாதசி திதியும் ஸ்வாதி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய நன்னாளில் சூரிய உதயாதி நாழிகை 05.00- க்கு மேல் 07.30 நாழிகைக்குள் காலை 09.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் மிதுன லக்னம் கூடிய சுபமுகூர்த்தத்தில் சிங்கப்பூர் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலில் மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறும். பக்தர்கள் அனைவரும் மஹா கும்பாபிஷேகத்தைக் கண்டுக்களித்து, அருள்மிகு தெண்டாயுதபாணியின் திருவருள் பெற வேண்டுகிறோம்.

சிங்கப்பூர் கல்வி அமைச்சரைச் சந்தித்த இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

நாளை (ஜூன் 1) காலை 09.00 மணி முதல் 09.30 மணி வரை ராஜகோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, காலை 09.30 மணி முதல் 10.00 மணி வரை மூலவர் மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக தொண்டூழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், வீட்டில் இருந்தபடியே கும்பாபிஷேக நிகழ்வுகளைக் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளவிருப்பதால் இந்து அறக்கட்டளை வாரியம் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது. அதேபோல், சிங்கப்பூர் அமைச்சர்களும் கோயிலுக்கு வந்து வழிபாடு நடத்தவுள்ளனர்.

“இந்தியாவில் மூன்று திறன் பயிற்சி மையங்களை நிறுவியுள்ளது சிங்கப்பூர்”- அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தகவல்!

பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே, தெண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேக விழாவில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பக்தர்களுக்கு இந்து அறக்கட்டளை வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.