ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி- ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Hindu Endowments Board

இந்து அறக்கட்டளை வாரியம் இன்று (10/01/2022) வெளியிட்டிருந்த அறிவிப்பில், “கோவிட்- 19 நோய்த்தொற்று பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் வரும் ஜனவரி 13- ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடைபெறவிருக்கும் வைகுண்ட ஏகாதசி திருநாளன்று கீழ்கண்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.

இந்திய ஊழியருக்கு அடித்த லாட்டரி: இந்திய மதிப்பில் “500 மில்லியன்” – ஓட்டுநர், கோடீஸ்வரர் ஆன மகிழ்ச்சி!

வரும் ஜனவரி 13- ஆம் தேதி அன்று காலை 08.00 மணி முதல் ஜனவரி 14- ஆம் தேதி காலை 04.30 மணி வரை கோயில் திறந்திருக்கும். முழுமையாக தடுப்பூசிப் போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். எந்நேரமும், அதிகபட்சம் 400 பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.

பால் குட அபிஷேகத்திற்கும் (காலை 07.30 மணி) மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனைக்கும் (மாலை 06.00 மணி) முன்பதிவு செய்ய பக்தர்கள் கோயில் அலுவலகத்தை 62985771 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். உங்கள் பெயர்களில் கோயில் அர்ச்சகர்கள் பால் குட அபிஷேகத்தையும் மற்றும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம அர்ச்சனையும் உங்கள் பெயர்களில் செலுத்திவிடுவார்கள்.

‘பார்சிலோனா, மிலன் இடையே விமான சேவை’- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

காலை 06.30 மணி முதல் 09.30 மணி வரை, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜையின் நேரலையை https://heb.org.sg எனும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத் தளத்தில் பார்வையிடலாம்.

கோயிலின் கார் நிறுத்தும் (Car Parking) இடம் வரும் ஜனவரி 12- ஆம் தேதி புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணி முதல் ஜனவரி 14- ஆம் தேதி காலை 06.00 மணி வரை மூடப்படும். கூடுதல் விவரங்களுக்கு 62985771 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.