ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விழா குறித்த முக்கிய அறிவிப்பு!

Photo: Sri Srinivasa Perumal Temple

 

சிங்கப்பூரில் உள்ள செராங்கூன் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ( Sri Srinivasa Perumal Temple). இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விழா மற்றும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டிற்கான ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி (Sri Vaikunda Ekadasi) விழா குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

35 ஆண்டுகளுக்கு முன் நடந்த கலவரம்.. அப்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய ஆடவர்.. சிங்கப்பூர் வந்தபோது கைது

அதில், “ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விழா, வரும் டிசம்பர் 23- ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்புடன் தொடங்கி டிசம்பர் 24- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டிசம்பர் 22- ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணி முதல் டிசம்பர் 24- ஆம் தேதி காலை 07.30 மணி வரை கார் பார்க்கிங் மூடப்பட்டிருக்கும்.

ஸ்ரீ வைகுண்ட ஏகாதசியன்று பால்குடம் செலுத்த விரும்புவோர், அதற்கான சீட்டுகளை கோயில் அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி நாளான வரும் டிசம்பர் 23- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 05.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிப் பூஜையும், காலை 06.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பும், காலை 07.30 மணிக்கு பொதுமக்கள் பங்கேற்கும் திருமஞ்சனமும், காலை 08.30 மணிக்கு நித்திய பூஜையும், மதியம் 12.00 மணிக்கு பிரசாதம் விநியோகமும், மதியம் 01.30 மணிக்கு உச்சிக்கால பூஜையும், மாலை 05.00 மணிக்கு நித்திய பூஜையும், இரவு 07.00 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் திருவீதி உலாவும், இரவு 07.30 மணிக்கு உபய பூஜையும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 09.30 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறும். இரவு 09.45 மணி முதல் நள்ளிரவு 04.00 மணி வரை பக்தர்களுக்காக கோயில் திறந்திருக்கும்.

ஜி20 மெய்நிகர் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்!

காலை 07.00 மணி, காலை 09.00 மணி, காலை 10.00 மணி, காலை 11.00 மணி, மாலை 05.30 மணி, மாலை 06.30 மணி, இரவு 08.30 மணி, இரவு 09.00 மணி, இரவு 11.00 மணி, நள்ளிரவு 01.00 மணி, நள்ளிரவு 02.00 மணி, நள்ளிரவு 03.00 மணிக்கு பிரசாதங்கள் வழங்கப்படும்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, 62985771 என்ற தொலைபேசி எண்ணில் கோயில் அலுவலகத்தை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.