“ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை, பூர்ணாபிஷேகம் நடைபெறும்” என அறிவிப்பு!

"ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை, பூர்ணாபிஷேகம் நடைபெறும்" என அறிவிப்பு!
Photo: HEB

 

சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் சுவாமிக்கு லட்சார்ச்சனை (Laksharchanai) மற்றும் பூர்ணாபிஷேகம் (Poornabishegam) என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் தனது கடைசி கடையையும் மூடிய ‘Milksha’!

இது குறித்து இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 05- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு காலை 08.00 மணிக்கு சங்கல்பமும், காலை 09.15 மணிக்கு கலச பூஜையும், காலை 09.45 மணிக்கு லட்சார்ச்சனையும் (முதல் காலம்) காலை 11.15 மணிக்கு லட்சார்ச்சனையின் முதல் காலம் நிறைவும், காலை 11.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும், மாலை 05.30 மணிக்கு நித்திய பூஜையும், மாலை 06.30 மணிக்கு சங்கல்பமும், இரவு 07.15 மணிக்கு லட்சார்ச்சனையும், இரவு 08.40 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

சென்னையில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்!

ஜனவரி 06- ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 08.00 மணிக்கு சங்கல்பமும், காலை 08.30 மணிக்கு கலச பூஜையும், லட்சார்ச்சனையும், காலை 09.30 மணிக்கு மஹா தீபாராதனையும், காலை 09.45 மணிக்கு பூர்ணாபிஷேகமும், காலை 10.15 மணிக்கு கடம் புறப்பாடு கலசாபிஷேகமும், காலை 11.30 மணிக்கு மஹா தீபாராதனையும், அன்னதானமும், மாலை 06.00 மணிக்கு நித்திய பூஜையும், மாலை 07.30 மணிக்கு உபய பூஜையும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும் நடைபெறும். இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 62595238 என்ற கோயில் அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.