குழந்தைகள், ஆண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்துகொள்வது.. முகம் சுளித்த தமிழர்கள் – சமூக பொறுப்பு முக்கியம்

St John's Island Women change clothes
Stomp

செயின்ட் ஜான்ஸ் தீவில் பெண்கள் பலர் தங்கள் உடைகளை மாற்றும் காட்சி பார்வையாளர்களை முகம் சுளிக்கும் படி செய்துள்ளது.

முகம் சுளிக்கும் இந்த காட்சியை கண்டவர்களில் ஸ்டாம்பர் ரூபியும் ஒருவர். இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் 3 காலை 11 மணியளவில் நடந்ததாக ஸ்டாம்ப் குறிப்பிட்டுள்ளது.

உணவகத்தில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர்… 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ் – காத்திருக்கும் பிரம்படி

பின்னர் அதனை வீடியோ எடுத்த ரூபி அதனை ஸ்டாம்புடன் பகிர்ந்து கொண்டு கூறியதாவது: “கனமழை பெய்து கொண்டிருந்ததால் அனைவரும் அந்த கூடாரத்தில் இருந்தனர்.”

அதே போல, “இந்தப் பெண்களின் குழுவும் கூடாரத்திற்கு வந்தது, அங்கு அவர்கள் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.”

அதன் பின்னர்,”மழை நின்றவுடன், பெண்கள் எழுந்து ஆடைகளை மாற்றத் தொடங்கினர், அவர்களை சுற்றி நிறைய ஆண்களும் குழந்தைகளும் இருப்பதைக் கூட அவர்கள் பொருட்படுத்தவில்லை.”

மேலும், கழிப்பறை கூடாரத்தின் அருகே இருந்தது, அதாவது அங்கிருந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான தூரத்தில் கழிப்பறை இருந்துள்ளது.

“நானும் ஒரு குழந்தையுடன் அங்கு இருந்தேன், இந்த சம்பவம் மிகவும் வருத்தமளித்தது. அங்குள்ள அனைவரும் அந்த பெண்களைப் பார்த்து கொண்டிருந்தனர், ஏனெனில் அவர்கள் தங்கள் உள்ளாடைகளை கூட மாற்றினர்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார் அவர்.

சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கம் ? – எத்தனை பேர் ?