சிங்கப்பூரில் சினம் கொண்டு சிறிய கடை உரிமையாளர்கள் – வாடிக்கையாளர் மீது கோப்பையை வீசி கடுமையாக நடந்து கொண்ட உரிமையாளர்

Rep. Photo

சிங்கப்பூரில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் சென்டரின் ஸ்டால் உரிமையாளர் நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர் மீது ஆத்திரத்தில் கோப்பையை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (May 28) இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாணயத்திற்கு தகுந்த சில்லரை மாற்றம் கொடுக்காததால் பெண் வாடிக்கையாளர் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

பெண் வாடிக்கையாளர் தனது 2 குழந்தைகளுடன் வந்து பெண் ஸ்டால் உரிமையாளரிடம் இரண்டு பானங்களை S$10 நோட்டைக் கொடுத்து வாங்கியுள்ளார். இரண்டு பானங்களுக்கு உரிய தொகையை எடுத்துக்கொண்ட உரிமையாளர் மீதி S$2 மதிப்புள்ள சில்லறையை 10 மற்றும் 20 சென்ட் நாணயங்களுடன் கொடுத்தார்.

தன்னிடம் S$2 நோட்டுகள் இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் பெண் ஆத்திரமடைந்து, கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரண்டு குழந்தைகளுடன் வந்த வாடிக்கையாளர் மோசமாக நடந்து கொள்ளவில்லை எனினும் கடை உரிமையாளர் அதிக சத்தத்துடன் கடுமையாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பணப் பதிவேட்டின் மேசைக்கு அருகில் நின்றிருந்த ஒரு ஆண் மற்றும் கடை உரிமையாளரும் இணைந்து அந்தப்பெண் வாடிக்கையாளரை பயமுறுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும் ஆத்திரத்தில் அங்கிருந்த பிளாஸ்டிக் கோப்பையை எடுத்து வீசியதில் வாடிக்கையாளர் பெண்மணியின் கழுத்தில் கீறல் விழுந்ததாகவும் அங்கிருந்த மற்றொரு வாடிக்கையாளர் தெரிவித்தார்.

கடை உரிமையாளர்கள் சூடான மனநிலை கொண்டவர்கள் என்று அருகில் பணிபுரியும் ஒரு நபர் தெரிவித்தார். அடிக்கடி தம்பதியர்கள் அவர்களது கடை வாடிக்கையாளர்களுடன் தகராறு செய்வதை பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

உடனடியாக மற்றொரு வாடிக்கையாளர் காவல் துறைக்கு அழைப்பு விடுத்த நிலையில், ஆறு காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடையில் இருந்த 23 வயது இளைஞன் மற்றும் மற்றொரு வாடிக்கையாளர் அதிகாரிகளுக்கு வாக்குமூலம் அளித்து விசாரணைக்கு உதவி வருகின்றனர்.