“அத்தியாவசியப் பொருட்களுக்கு வாரத்தில் ஒரு நாள் தள்ளுபடி” – Fairprice பேரங்காடி அறிவிப்பு!

சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனமான Fairprice பேரங்காடி அதன் அனைத்துக் கிளைகளிலும் வெள்ளிக்கிழமை தோறும் சுமார் 100 பொருட்களுக்கு 5 விழுக்காடு தள்ளுபடியை வழங்குகிறது.

Fairprice பேரங்காடியின் ‘Stretch Your Dollar’ திட்டத்தின் கீழ் இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிவரை வெள்ளிக்கிழமைகள் தோறும் இந்த தள்ளுபடி இருக்கும்.

அரிசி, பால், முட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் தள்ளுபடி வழங்கப்படும் 100 அத்தியாவசியப் பொருட்களில் உள்ளடங்கும்.

சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

Fairprice பேரங்காடியின் இந்த தள்ளுபடி நேற்று (மார்ச் 04) தொடங்கியது. கொரோனா நோய்ப் பரவலால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கையாள பொதுமக்களுக்கு உதவுவது இத்திட்டத்தின் இலக்குகளில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fairprice பேரங்காடியின் இந்த தள்ளுபடி மூலம் பணம் சேமிக்க முடிவதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக சில வாடிக்கையாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினர்.

பேரங்காடிக்கு செல்லும் முன் இந்த தள்ளுபடி பற்றி சில வாடிக்கையாளர்களுக்கு தெரியவில்லை. பொருட்களை வாங்கும்போது இதுகுறித்து தெரியவந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது என அவர்கள் தெரிவித்தனர்.

5 விழுக்காடு தள்ளுபடி என்பது அதிகம் என்றும், இது தங்களுக்குப் பெரிய அளவில் உதவும் என்றும் சில வாடிக்கையாளர்கள்
கூறினார். Fairprice பேரங்காடியின் இந்த திட்டம் குறித்து வாடிக்கையாளர்க்கு தெரியப்படுத்த பேரங்காடிக்கு உள்ளேயும், வெளியேயும் குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

பசை வகை பொறியில் சிக்கி தவித்த பூனைக்குட்டி – பிறகு என்ன ஆனது? Tampines wet market சம்பவம் வைரல் (வீடியோ)