சிங்கப்பூரில் குளுகுளு மழை – வெப்பம் தணிந்து நிலவிய குளிர்ச்சி

sunday-morning-rain-cooling-singapore

Singapore weather: சிங்கப்பூரில் நிலவிய கடும் வெயிலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று (ஜூன் 18) காலை மழை பொழிந்தது.

அதன் காரணமாக வெப்பநிலையானது 21.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் தெரிவித்துள்ளது.

ஈடுகட்டமுடியாத தமிழக ஊழியரின் இழப்பு – துயரில் மூழ்கிய குடும்பத்துக்கு உதவிக்கரம்

காலை 8 மணியளவில் தீவின் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஒரு மணி நேரத்திற்குள் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளிலும் மழை பெய்ததாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த மழையானது நண்பகல் வரை நீடிக்கும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் கணிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, சிங்கப்பூரின் தென்மேற்கில் உள்ள கென்ட் ரிட்ஜ் பகுதியில் நள்ளிரவு முதல் பெய்ததாவும், அதாவது 49.2 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும் ஆய்வகம் கூறியுள்ளது.

ஆனாலும், இந்த குளுர்ச்சியான காலநிலை தொடர்ந்து நீடிக்காது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

யார் இந்த வினோத் குமார்?, சிங்கப்பூர் வந்தது எப்படி?- விரிவாகப் பார்ப்போம்!