வாள் வீசி ஊழியரை தாக்கிய நபருக்கு பிரம்படி விதிப்பு

Sword-wielding attacker gets 18 months jail 6 strokes cane Buangkok
Facebook/Roads.sg

புவாங்காக் ஸ்கொயர் மால் அருகே வாள் வீசி பாதசாரியை தாக்கிய ஆடவர் ஒருவருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 27) 18 மாத சிறைத்தண்டனையும் ஆறு பிரம்புகளும் விதிக்கப்பட்டன.

கடந்த மார்ச் 14ம் தேதி புவாங்கோக் கிரெசண்ட் (Buangkok Crescent) வட்டாரத்தின் போக்குவரத்து சந்திப்பில் சென்ற கார்கள் மற்றும் அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவரையும் வாள் வைத்திருந்த ஃபாதில் யூசோப் என்ற ஆடவர் தாக்கினார்.

“வித்தியாசமாக எதையோ கண்டேன்” என கடற்கரையில் இருந்து தெறித்து ஓடிய சிறுவன் – விரைந்து வந்த போலீஸ்

பாதசாரி மற்றும் கார்களை வெட்ட அவர் வாள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

38 வயதான அவர் வாளால் மூன்று முறை வெட்டியதன் விளைவாக பாதிக்கப்பட்டவரின் இடது கை மற்றும் தோள்பட்டையில் காயங்கள் ஏற்பட்டன.

ஃபாதில், அந்த ஆயுதத்தை பயன்படுத்தி மாலுக்கு முன்னால் உள்ள போக்குவரத்து சந்திப்பில் அந்த வழியாக சென்ற கார்களை தாக்கி, வாகனங்களை சேதப்படுத்தினார்.

தனது வீட்டை விட்டு வாளுடன் வெளியேறுவதற்கு முன்பு சில அறியப்படாத மாத்திரைகளை ஃபாதில் உட்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

“உக்காந்து எத்தனை ரயில் போகுதுனு எண்ணினால் வேலை” – லட்ச கணக்கில் பணத்தை கொடுத்து ஏமாந்த தமிழக ஊழியர்கள்