லிட்டில் இந்தியாவில் பிடிபட்ட 90க்கும் மேற்பட்டோர்… வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தின்கீழ் நால்வர் கைது

File Photo Via The Singapore Police Force

லிட்டில் இந்தியா: சையத் அல்வி சாலையில் பிடிபட்ட சுமார் 97 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சையத் அல்வி சாலையில் உள்ள உரிமம் பெறாத கேடிவி-கான்செப்ட் கூடத்தில் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளுக்கு அவர்கள் கட்டுப்படவில்லை என கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியர்களை எடுத்தால், சிங்கப்பூர் ஊழியர்களுக்கு S$1,400 சம்பளம் – அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயம்!

அவர்களில், சீன நாட்டை சேர்ந்த இரவு நேர கேளிக்கை விடுதி பெண்கள் நான்கு பேர் அடங்குவர்.

கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி இரவு, லிட்டில் இந்தியாவிலுள்ள கடைவீடு ஒன்றின் உணவு மற்றும் பான (F&B) கடையாக செயல்பட்ட கூடத்தை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது, அங்கிருந்த 24 முதல் 65 வயதுக்குட்பட்ட சுமார் 60 ஆண்களும் 37 பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

அவர்கள், அந்த உரிமம் இல்லாத கேடிவி கூடத்தின் கதவுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்ததாக போலீசார் சனிக்கிழமை (பிப் 19) தெரிவித்தனர்.

அந்த 97 பேரில், 33 முதல் 48 வயதுக்குட்பட்ட சீன நாட்டை சேர்ந்த நான்கு பெண்கள், இரவு கேளிக்கை விடுதி பெண்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், அவர்களில் ஒருவருக்கு கோவிட்-19 பாசிட்டிவ் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

அந்த 4 பெண்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!