தைவானில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த ‘ஸ்கூட்’ விமானத்தில் தீ!

Photo: Wang Hao-yu's Facebook Page

தைவான் நாட்டின் தாயுவான் சர்வதேச விமான நிலையத்தில் (Taoyuan International Airport) இருந்து சிங்கப்பூரின் சாங்கி சர்வதேச விமான நிலையத்திற்கு ஜனவரி 10- ஆம் தேதி அன்று இரவு 07.31 PM மணிக்கு புறப்படத் தயாராகவிருந்தது TR993 என்ற ஸ்கூட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம்.

சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வந்த தம்பதிக்கு கொரோனா உறுதி!

இந்த விமானத்தில் 186 பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை இருந்துள்ளனர். அப்போது, பயணி ஒருவர் தனது பவர் பேங்கிற்கு சார்ஜிங் போட்டுள்ளார். அது திடீரென தீப்பிடித்தது. இதனால் விமானம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்த தகவல் விமான நிலையத்தின் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக விமானம் இருந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் விமானத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

இதைத் தொடர்ந்து, தீ மற்றும் புகையை விமானத்தில் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுப்பதற்காக, தீயணைப்பான்களைப் பயன்படுத்தி,முழுவதும் அணைத்தனர்.

“Work permit வேலை கிடைத்தும் சிங்கப்பூர் வர முடியல” – காரணம் இது தான் ஊழியர்களே!

இந்த தீ விபத்தில் பவர் பேங்க் சார்ஜிங் போட்டவருக்கும், அவர் அருகில் இருந்த மற்றொரு பயணிக்கும் கைவிரல்களில் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டது. அவர்களுக்கு அங்கேயே மருத்துவ உதவி அளித்து அனுப்பி வைக்கப்பட்டதாக ஸ்கூட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் அனைவரும் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. TR993 விமானம் ஜனவரி 11- ஆம் தேதி அன்று இரவு 07.35 PM மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த 20 ஆண்டுகளில் 42 தேசிய சேவையாளர்கள் பணியின்போது இறப்பு

இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள ஸ்கூட் நிறுவனம், தங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் முதன்மையான முன்னுரிமை என்று கூறியுள்ளது. தீ விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.