சிங்கப்பூர் திரையரங்குகளில் வெளியானது ‘டாக்டர்’!

நடிகர் சிவகார்த்திகேயன்- பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ளார். ‘உன்னாலே உன்னாலே’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த வினய், இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அதேபோல், யோகி பாபு, அர்ச்சனா, அருண் அலெக்சாண்டர், தீபா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து பல மாதங்களாகின்ற நிலையில், கொரோனா காரணமாக திரைப்படம் வெளியீடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில்,தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு. வரும் இன்று (09/10/2021) திரையரங்குகளில் வெளியானது.

கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

இப்படத்தின் சூப்பர் ஹிட் அடித்த ‘செல்லம்மா செல்லம்மா’ பாடல் முன்னோட்ட வீடியோ வெளியாகி கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ’ரெளடி பேபி’, ‘புட்டபொம்மா’ பாடல் புகழ் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் ‘செல்லம்மா செல்லம்மா’ பாடலுக்கு கொரியோகிராஃபி செய்துள்ளார்.

இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ‘டாக்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்தின் அனைத்து காட்சிகளும் சூப்பராக இருந்தராக, அவரது ரசிகர்கள் கூறுகின்றனர.