தமிழக விமான நிலையங்களில் தீவிரமாகும் சோதனைகள்: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு ஏற்பாடு!

Singapore Trichy flight

தொற்று ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளிலிருந்து வருவோருக்கு பயணக்கட்டுப்பாடு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழக விமானநிலையங்களிலும் அப்பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் கடுமையாகியுள்ளது.

இன்று புதன்கிழமை முதல் அதிக ஆபத்துள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் கடுமையாகியுள்ளன.

சிங்கப்பூரில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு டிச. 1 முதல் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள்!

சோதனை மற்றும் முடிவுகளைப் பெறுவதற்காக நீண்ட நேரம் ஆகும் என்பதை கருத்தில் கொண்டு சென்னை விமான நிலையத்தில், T4 முனையத்தில் சோதனைக்காக பிரத்யேக இடத்தை விமான நிலைய அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த வசதியில் ஒரே நேரத்தில் 450 பயணிகள் வரை சோதனையில் ஈடுபட முடியும் என்று விமான நிலைய மூத்த அதிகாரி தெரிவித்தார்.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களின் விமான நிலைய இயக்குனருக்கு டி.எஸ். பொது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியதாவது; பரிசோதனையின் போது யாருக்கேனும் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால், அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மேலும், உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அதனை செயல்படுத்தவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் “கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள இடங்களின் பட்டியலில் சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது.

அதில் யுனைடெட் கிங்டம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளும் அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இந்தியாவின் “கிருமி தொற்று ஆபத்து அதிகம்” உள்ள பட்டியலில் இடம் பிடித்த “சிங்கப்பூர்”