“தமிழ் புத்தாண்டையொட்டி, இந்த நான்கு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்”- இந்து அறக்கட்டளை வாரியம் அறிவிப்பு!

Photo: Sri Sivan Temple

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில், ஸ்ரீ சிவன் கோயில், ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயில் ஆகிய நான்கு கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) அறிவித்துள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இந்திய மரபுடைமை நிலையம்!

அதன்படி, ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஏப்ரல் 14- ஆம் தேதி அன்று காலை 05.15 மணிக்கு பொங்கலிடப்பட்டு பூஜையும், காலை 05.30 மணிக்கு ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு 07.15 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.15 மணிக்கு பஞ்சாங்கம் படித்தலும், இரவு 08.30 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் காலை 06.00 மணிக்கு சுப்ரபாதம் மற்றும் கோ பூஜையும், காலை 06.45 மணிக்கு திருமஞ்சனமும், காலை 09.00 மணி முதல் காலை 10.30 மணி வரை அன்னதானமும், மாலை 06.30 மணிக்கு பிரசாதம் விநியோகமும், இரவு 07.30 மணிக்கு உபய பூஜையும், பஞ்சாங்கம் படித்தலும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.30 மணிக்கு பிரசாதம் விநியோகமும், இரவு 09.00 மணிக்கு ஏகண்ட சேவையும் நடைபெறும்.

சிங்கப்பூர் அணிக்காக களமிறங்கும் இந்திய ஊழியர்கள்!

ஸ்ரீ சிவன் கோயிலில், காலை 10.30 மணிக்கு ஸ்ரீ சிவனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 11.00 மணிக்கு தீபாராதனையும், இரவு 07.00 மணிக்கு உபய பூஜையும், இரவு 07.30 மணிக்கு பஞ்சாங்கம் படித்தலும், இரவு 08.00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.15 மணிக்கு பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

ஸ்ரீ வைராவிமட காளியம்மன் கோயிலில், காலை 09.00 மணிக்கு ஸ்ரீ காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 10.45 மணிக்கு மஹா தீபாராதனையும், பிரசாதம் விநியோகமும், இரவு 07.30 ,மணிக்கு உபய பூஜையும், இரவு 08.00 மணிக்கு பஞ்சாங்கம் படித்தலும், இரவு 08.20 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவு 08.45 மணிக்கு மஹா தீபாராதனையும் மற்றும் பிரசாதம் விநியோகமும் நடைபெறும்.

இவ்வாறு இந்து அறக்கட்டளை வாரியம் தனது அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.