தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இந்திய மரபுடைமை நிலையம்!

Photo: Indian Heritage Centre

வரும் ஏப்ரல் 14- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், சிங்கப்பூரில் அதற்கான ஏற்பாடுகளை லிஷா (Lisha) மற்றும் இந்திய மரபுடைமை நிலையம் (Indian Heritage Centre- ‘IHC’) ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரில் விதவிதமான தமிழ் பாரம்பரிய உணவுகளைச் சுவைக்க ஒரு வாய்ப்பு!

குறிப்பாக, லிட்டில் இந்தியா (Little India) பகுதியில் உள்ள இந்திய மரபுடைமை நிலையத்தின் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக கோயில்களில் உள்ள கதவுகள் போன்று பெரிய கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், வாழை மரங்கள், தோரணங்களும் கட்டப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டையொட்டி, வரும் ஏப்ரல் 15, 16- ஆம் தேதிகளில் காலை 10.00 PM மணி முதல் மாலை 06.00 PM மணி வரை இந்திய மரபுடைமை நிலையம் திறந்திருக்கும். இந்த இரண்டு தினங்களிலும் கலை நிகழ்ச்சிகள், தமிழ் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் இனிப்புகள் மற்றும் உணவுகளை தயாரிக்கும் செயல்முறைகள் குறித்தும் விளக்கப்படும்.

திருச்சி விமான நிலையத்தில் 929 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்!

இந்திய மரபுடைமை நிலையத்தின் அலுவலகத்திற்குள் வண்ணமின் விளக்குகள், தமிழ் புத்தாண்டின் சிறப்புகள் ஆகியவற்றை விளக்கும் வகையில் சிறப்பு கண்காட்சி தொகுப்பும் இடம் பெறவுள்ளது. இதனால் சிங்கப்பூரில் வசித்து அனைத்து மக்களும் கண்டுக்களிக்கலாம். மேலும், தமிழ் புத்தாண்டு நாளில் அதிகம் மக்கள் குவிவார்கள் என்பதால், சிறப்பான ஏற்பாடுகளை நிர்வாகம் செய்துள்ளது.

இந்த நாட்களில் இந்திய மரபுடைமை நிலையத்திற்குள் செல்வதற்கு எவ்வித நுழைவு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய மரபுடைமை நிலையம் சிறப்பு அலங்காரத்துடன் வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. இதனை அந்த சாலையில் பயணிக்கும் அனைவரும் கண்டுகளிக்கின்றனர்.