சிங்கப்பூரில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்!

சிங்கப்பூரில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம்!
File Photo

 

 

வரும் மே 20- ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 05.00 மணிக்கு, சிங்கப்பூரில் உள்ள கோல்டன் மைல் டவரில் (Golden Mile Tower) அமைந்துள்ள கார்னிவல் திரையரங்கில் (Carnival Cinemas) சொல்வேந்தர் சுகி சிவம் தலைமையில் ‘சமூக ஊடகங்கள் வரமா? சாபமா?’ என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. இதில் நட்சத்திர பேச்சாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

லாபத்தில் சாதனை படைத்த “சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்” – 76 ஆண்டுகால வரலாற்றில் இதுவே முதன்முறை

“சமூக ஊடகங்கள் வரமே” அணிக்காக ராம்குமார், தேவக்கோட்டை ராமநாதன், அறந்தாங்கி நிஷா ஆகியோர் பட்டிமன்றத்தில் பங்கேற்று பேசுகின்றனர். அதேபோல், “சமூக ஊடகங்கள் சாபமே” அணிக்காக மனோஜ் பிரபாகர், சாந்தாமணி, மோகன சுந்தரம் ஆகியோர் பங்கேற்று பேசவுள்ளனர்.

சீதா மீடியா, கே.எஸ்.டாக்கீஸ், மாஸ்க் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நகைச்சுவையுடன் சிந்திக்க வைக்கும், இந்த பட்டிமன்றத்தை நேரில் கண்டுகளிக்க விரும்புவர்கள் https://sg.bookmyshow.com/e/sukisiva என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று 35 வெள்ளியை கட்டணமாக செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

சாப்பிட்டுக்கொண்டும், போன் பயன்படுத்தியும் பேருந்தை இயக்கிய ஓட்டுனர் – வீடியோ வைரலானதை அடுத்து சஸ்பெண்ட்

தமிழகத்தின் மிகச்சிறந்த பேச்சாளர்களின் ஒருவரான சுகி சிவம், பேச்சைக் கேட்க கூட்டம் அலைமோதும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.