சிங்கப்பூரில் இருந்து திரும்பியவர் குறித்து பொய்யான தகவல் அளித்த நபர்கள் – எச்சரித்த போலீசார்

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பியவர் குறித்து பொய்யான தகவல் அளித்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.

பெண் நக்சலைட் பதுங்கிருப்பதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இரண்டு மாற்றுத்திறனாளிகள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி இரவு 11:00 மணிக்கு, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட அவர்கள் திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தில் நக்சலைட் பதுங்கியிருப்பதாக பொய்யான தகவலை அளித்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி உணவுத் தோட்டங்கள்: “ஊழியர்களுக்கு நல்ல உணவு, மன ஆரோக்கியத்தை வழங்கும்”

அதனை தொடர்ந்து, அந்த முகவரியில் உள்ள 51 வயது பெண்ணின் வீட்டுக்கு சென்று அதுகுறித்து போலீசார் விசாரித்தனர்.

ஆனால், அவர் சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பி, திருப்பூரில் தனியாக தங்கி வேலை செய்து வருவது தெரியவந்தது.

அவரிடம் சோதனை செய்த போலீசார், நக்சலைட் இல்லை என்றும், அது தவறான தகவல் என்றும் கூறினர்.

பொய்த்தகவல் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அழைப்பு விடுத்த நபர்கள் அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகே வசிக்கும், இரண்டு மாற்றுத்திறனாளிகள் என்பது தெரிய வந்தது.

போதையில் தவறான தகவலை தெரிவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது, பின்னர் இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பயணிகள் பயன்பெறும் வகையில், சிங்கப்பூரில் 90க்கும் மேற்பட்ட விரைவு பரிசோதனை நிலையங்கள்!