பயணிகள் பயன்பெறும் வகையில், சிங்கப்பூரில் 90க்கும் மேற்பட்ட விரைவு பரிசோதனை நிலையங்கள்!

(Photo: Raffles Medical Group)

கோவிட்-19 சோதனையை மிகவும் எளிமையாக்க, 90க்கும் மேற்பட்ட இடங்களில் சுய ஆன்டிஜென் ரேபிட் சோதனைகளை (ART) மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பயணிகளும், முன் களப் பணியாளர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது பல் மருத்துவமனைகள் மற்றும் மரினா பே சாண்ட்ஸ் உட்பட்ட இடங்களும் அதில் அடங்கும்.

பாலியல் கிளர்ச்சி சேவைகளை வழங்கும் மசாஜ் பார்லர்கள்: “ஏஜென்சிக்கு S$10,000 கட்டி வருகிறோம்” – பெண் ஊழியர்களின் பேட்டி

Q&M துணை நிறுவனமான Acumen Diagnostics கூறியதாவது; சோதனை நோக்கங்களுக்காக தீவு முழுவதும் உள்ள 10 கிளினிக்குகளில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று கூறியது.

இந்த சோதனை நிலையங்கள் ஹவுசிங் போர்டு குடியிருப்புகளுக்கு அருகிலும், கிரேட் வேர்ல்ட் சிட்டி போன்ற பிரபலமான மால்களிலும் அமைந்துள்ளன.

கிளினிக்குகளில் ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக நான்கு பேருக்கு சோதனை மேற்கொள்ளப்படும், இதனால் பணியாளர்கள் வளாகத்தை கிருமி நீக்கம் செய்ய போதுமான நேரம் இருக்கும் என்றும், Acumen Diagnostics-ன் தலைமை நிர்வாகி Dr Ong Siew Hwa கூறினார்.

சுகாதார பராமரிப்பு சேவை வழங்குநரான ‘டாக்டர் எனிவேர்’ அதன் எட்டு கிளினிக்குகளில் சோதனை சேவைகளை வழங்குகிறது, இதில் இன்டெமெடிக்கல் கிளினிக் 24 மணிநேரமும் திறந்திருக்கும்.

இதுவரை ஆறு மால்களில் விரைவுசோதனை நிலையங்களை உருவாக்குவதற்கு கேபிட்டலேண்ட், சுகாதார மேம்பாட்டு வாரியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

விரைவு சோதனை நிலையத்திற்கு வருபவர்கள் ஆன்லைன் மூலம் அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர் தனது “தடுப்பூசி நிலையை” மற்றொரு ஊழியர் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றச்சாட்டு