கோவிட்-19 காரணமாக தனியார் வாடகை ஓட்டுநரான கலைஞர்: விபத்தில் உயிரிழந்த பரிதாபம்

Shin Min Daily News

கடந்த டிச. 23 அன்று 59 வயதுடைய ஆடவர் ஒருவர் தெம்பனீஸ் விபத்தில் உயிரிழந்தார் என்று நாம் முன்னர் பதிவிட்டு இருந்தோம்.

தற்போது அவர் யார் என்பது பற்றிய தகவல் கிடைத்துள்ளது, அவர் ஒரு கலைஞர் என்றும் தனியார் வாடகை ஓட்டுநராக பணிபுரிந்தார் என்றும் ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

தெம்பனீஸ் சந்திப்பில் 6 வாகனங்கள் விபத்து: ஒருவர் மரணம், 4 பேர் காயம் – (பதைபதைக்கும் விபத்து வீடியோ)

உயிரிழந்த Ng Wen Shun என்ற அந்த ஆடவர், 20 முதல் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஓவிய கலைஞர். அவரின் வீட்டிலோ அல்லது மாணவர்களின் வீடுகளிலோ பாடம் நடத்தும் கலை ஆசிரியராகவும் இருந்தார்.

இருப்பினும், தொற்றுநோய் அவரின் வாழ்க்கையை மாற்றியது. ஆம், அவர் கடந்த ஆண்டு மே மாதத்தில் தனியார் வாடகை வண்டி ஓட்டுநரானார் என்று அவரின் மாணவர் டான் ஜுன் ரோங் கூறினார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை தெரியும் என்று கூறிய டான், அவர் கனிவான மற்றும் பொறுமையான ஆசிரியர் என்றும் விவரித்தார், அவரிடமிருந்து டான் பெரிதும் பயனடைந்ததாகவும் கூறினார்.

தனது ஆசிரியரின் திடீர் மரணம் அறிந்து அதிர்ச்சியடைந்ததாக டான் கூறினார்.

10 நாடுகளுக்கான கட்டுப்பாட்டை நீக்கிய சிங்கப்பூர் – இனி அவர்கள் சிங்கப்பூர் பயணிக்கலாம்!

என்ன நடந்தது?

தெம்பனீஸ் அவென்யூ 10இல் நான்கு கார்கள், டாக்ஸி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் அவர் வியாழக்கிழமை (டிசம்பர் 23) இரவு உயிரிழந்தார்.

Tampines Avenue 1 மற்றும் Tampines Avenue 10 சந்திப்பில் இரவு 11.10 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) கூறியது.

அதில் ஒரு நபர் காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டார் என்றும், ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அந்த நபரை SCDF மீட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் 22 மற்றும் 38 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தனர்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 33 வயது ஓட்டுனர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

Work passes, PR உள்ளிட்ட அனுமதிகள் பெற இனி கட்டுப்பாட்டு நிபந்தனை… பிப்ரவரி 1 முதல் நடைமுறை