வெளிநாட்டு ரிமோட் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா? – சிங்கப்பூர் நிறுவனங்களின் குறைந்த சம்பள போக்கு ஒரு காரணமா?

indian worker jailed stalking woman work
Singapore

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மூலம் வேலைக்கு எடுக்கப்படும் வெளிநாட்டில் இருந்து வேலை செய்யும் “ரிமோட் வெளிநாட்டு ஊழியர்களின்” எண்ணிக்கை குறித்த தகவலை மனிதவள அமைச்சகம் கண்காணிப்பதில்லை என கூறப்பட்டுள்ளது.

இதனை மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நேற்று திங்கள்கிழமை (பிப் 28) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அனைத்து விமானங்களையும் காலவரையின்றி நிறுத்திவைத்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் – குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும்!

“கோவிட்-19 காரணமாக தொலைவில் இருந்து வேலை பார்க்கும் நடவடிக்கை மிகவும் பொதுவானதாக மாறியுள்ளது ” என்று அவர் விளக்கம் கூறினார்.

அதிக நிறுவனங்கள் குறைந்த ஊதியம் பெறும் பகுதிகளில் இருந்து ஊழியர்களை தங்கள் ரிமோட் வேலைக்கு பரிசீலிப்பதாகவும் அவர் கூறினார்.

அதிக மதிப்பு கூட்டப்பட்ட வேலைகளுக்கு இதே போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க, உலகளாவிய வர்த்தகம் மற்றும் உயர்தர வெளிநாட்டு ஊழியர்களுக்காக சிங்கப்பூர் திறந்திருக்க வேண்டும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கேள்விக்கு மனிதவள அமைச்சர் டான் சீ லெங் பதிலளித்தார்.

சிங்கப்பூரில் “தடுப்பூசி தகுதி” நிலையை இழந்த Work pass அனுமதி ஊழியர்கள்… எவ்வளவு பேர் தெரியுமா?