தஞ்சோங் பகார் அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து; 50 பேர் வெளியேற்றம்!

Tanjong Pagar Plaza
Photo: SCDF

 

 

சிங்கப்பூரில் தஞ்சோங் பகாரில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான தஞ்சோங் பகார் பிளாசாவில் (Tanjong Pagar Plaza) உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் புளாக்கில் இன்று (ஜூன் 30) மதியம் 02.15 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (Singapore Civil Defence Force- ‘SCDF’) தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் மாதாந்திர படித்தொகை உயர்வு – ஜூலை முதல் அமல்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அடுக்குமாடி குடியிருப்பில், ஐந்தாவது மாடியில் உள்ள வீட்டில் தீ கொளுந்துவிட்டு எரிந்ததைப் பார்த்தனர். பின்னர், பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துக் கொண்டு உள்ளே சென்ற வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். எனினும், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி நாசமானது.

இதனிடையே, அந்த புளோக்கில் இருந்த சுமார் 50 பேரை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக வெளியேற்றினர்.

தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.