டேங்கர் கப்பலில் கடும் தீ விபத்து: 3 ஊழியர்களை காணவில்லை – தேடும் பணி தீவிரம்

tanker fire
Photo: The Star

சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த டேங்கர் கப்பலில் நேற்று மே 1 ஆம் தேதி தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

அந்த டேங்கர் கப்பல், புலாவ் டிங்கியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் இருந்ததாக சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அன்று மாலை 4 மணிக்கு ஜோகூர் மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்புக்கு (MMEA) அழைப்பு வந்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி கவலை இல்லை.. DPM வோங் அளித்த உறுதி

அந்த டேங்கர் சீனாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்றதாக MMEA இயக்குனர் நூருல் ஹிசாம் ஜகாரியா கூறினார்.

இதனை அடுத்து தென் சீனக் கடல் பகுதியில் டேங்கரில் இருந்த 18 ஊழியர்கள் சிங்கப்பூர் மீட்பு குழுவால் மீட்கப்பட்டதாக MPA தெரிவித்துள்ளது. மேலும் 7 ஊழியர்கள் அருகில் இருந்த கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன மீதமுள்ள மூவரை கண்டுபிடிக்கும் பணி நடைபெறுவதாக MMEA தெரிவித்துள்ளது.

தீ எப்படி ஏற்பட்ட்டது என்பதற்கான விசாரணைகள் நடந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.