ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ரூபாய் 30 லட்சம் அபராதம்!

Photo: Air India

விமானத்தில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட பயணி மீது நடவடிக்கை எடுக்காத புகாரில் டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் கலவரம் – 9 பேர் சிக்கினர் (Video)

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவர் மீது சங்கர் மிஸ்ரா என்ற பயணி சிறுநீர் கழித்த விவகாரம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, விமானத்தில் பயணிக்கும் போது, புகார் அளித்து எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிறுவனம் எடுக்கவில்லை என பெண் பயணி தரப்பில் புகார் முன் வைக்கப்பட்டது.

இதனை விசாரித்த விமான போக்குவரத்து ஆணையம், அலட்சியமாக செயல்பட்டதற்காக சம்மந்தப்பட்ட விமானத்தின் தலைமை விமானியின் உரிமத்தை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு ரத்துச் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 30 லட்சம் ரூபாயும், அதன் விமான சேவை இயக்குநருக்கு 3 லட்சம் ரூபாயும் அபராதம் விதிப்பதாக இந்திய விமான போக்குவரத்து ஆணையரகம் அறிவித்துள்ளது.

சென்னையில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியைப் பார்வையிட்ட சிங்கப்பூர் துணைத் தூதர்!

இதற்கிடையே, சங்கர் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் பணியாற்றிய அமெரிக்க நிறுவனம், அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அத்துடன், நான்கு மாதங்களுக்கு ஏர் இந்தியாவில் பயணம் செய்ய அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.