சென்னையில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியைப் பார்வையிட்ட சிங்கப்பூர் துணைத் தூதர்!

Photo: Singapore in India Official Twitter Page

முதல் சர்வதேச புத்தக கண்காட்சி, சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 16- ஆம் தேதி முதல் ஜனவரி 18- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் உள்ளிட்ட 30- க்கும் மேற்பட்ட நாடுகளின் பதிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். ஒவ்வொரு நாட்டிற்கு ஒரு அரங்கம் என்ற வீதம், தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருந்தது.

“நியூசிலாந்து பிரதமர் மிகச்சிறந்த அர்ப்பணிப்பையும், தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்”- சிங்கப்பூர் பிரதமர் பாராட்டு!

இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் தூதர்கள் கலந்துக் கொண்டனர். சிங்கப்பூர் சார்பில், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தின் தூதர் பாங் ஸே சியாங் எட்கர் பங்கேற்றார்.

அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிங்கப்பூர் துணைத் தூதர் பாங் ஸே சியாங் எட்கருக்கு பட்டு துண்டு அணிவித்தும், புத்தகத்தை வழங்கியும் கௌரவித்தார். பின்னர், சிங்கப்பூர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்டு, அரங்கில் இருந்தவர்களிடம் கலந்துரையாடினார்.

35 பயணிகளை விட்டு புறப்பட்டுச் சென்ற ஸ்கூட் விமானம்!

இது குறித்து இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதரகம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில், “தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட 1வது சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி 2023- ல் தூதர் பாங் ஸே சியாங் எட்கர் கலந்து கொண்டார்.

Photo: Singapore in India Official Twitter Page

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் கிரிம்சன் எர்த் வெளியீடுகளின் எங்கள் பிரதிநிதிகளையும் (Association of Singapore Tamil Writers & Crimson Earth publications) சந்தித்தார்” என்று குறிப்பிட்டுள்ளது.