சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐவரிடம் 3 கிமீக்கு S$100 கட்டணம் வசூல் செய்த டாக்ஸி

taxi-fare foreigners singapore

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐந்து பேரிடம், 3 கிமீ பயணம் செய்ய சுமார் S$100 கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

சாண்ட்ஸ் எக்ஸ்போ & கன்வென்ஷன் சென்டரில் இருந்து சைனாடவுனில் உள்ள பார்க் ராயல் கலெக்ஷன் பிக்கரிங் வரை செல்ல அந்த தொகை கேட்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறைகள்.. வேலையிடங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா?

அதாவது, அது ஏழு இருக்கைகள் கொண்ட லிமோசின் டாக்ஸி என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டு பின்னர் அது YouTube தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த காணொளி Carl Runefelt Vlogs சேனலில் வெளியாகியுள்ளது.

கடந்த செப்.18 மற்றும் 19 அன்று ஆகிய தினங்களில் சாண்ட்ஸ் எக்ஸ்போ & கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற Token 2049 cryptocurrency மாநாட்டின் போது இந்த காணொளி எடுக்கப்பட்டது.

அதில் லிமோசின் டாக்சி ஓட்டுநரை (முகம் மறைக்கப்பட்ட நபர்) அவர்கள் அணுகி, பார்க் ராயல் கலெக்ஷன் பிக்கரிங் வரை செல்ல வேண்டும், கட்டணம் எவ்வளவு என கேட்டுள்ளனர்.

​​ஓட்டுநர்: “அங்கே மிகவும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். எனவே அங்கு செல்ல S$100 ஆகும்” என கூறியுள்ளார்.

நேரமின்மையைக் காரணமாக, அந்த குழு நடந்து செல்ல வேண்டாம் என்று முடிவு செய்து, அதற்குப் பதிலாக S$100 செலுத்தி அந்த வாகனத்தில் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  அந்த டாக்ஸி ஓட்டுநருக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டு சிங்கப்பூரர் ஒருவர் அந்த காணொளியில் கமெண்ட் செய்திருந்தார்.

இருப்பினும் மற்றொருவர் கூறுகையில்; S$20 கட்டணத்தில் மற்ற தனியார் வாடகை வாகனத்தில் செல்ல சாலையைக் கடக்க அவர்கள் விரும்பாததால்தான் பிரீமியம் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக சொன்னார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் – ஏற்பாடுகள் மும்முரம்