இப்படி எல்லா கம்பெனியும் செஞ்சிருந்தா அப்பாவி தொழிலர்கள் உயிர் போயிருக்குமா?

construction worker death
CNA reader

Teambuild construction group நிறு­வ­னத்­தின் ஆலை­யில், பணியாளர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத அளவுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்­வடி­வ­மைக்­கப்­பட்ட கட்­ட­டப் பிரி­வு­கள் தனித்­தனி பகுதிகளில் நேர்த்­தி­யாக அடுக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த நிறுவனத்தின் ஆலை­யில் 100க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­கள் பணியாற்றுகின்றனர்.

அடுக்­கி­வைக்­கப்­பட்ட ஆபத்தான பொருள்­க­ளுக்கு அருகே ஒரு­வ­ர் கூட பணி செய்யாத அளவுக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இயந்திரத்தின் தானி­யக்க முறை அனைத்து வேலை­களை­யும் செய்­து­வி­டு­கிறது.

எனவே, ஊழி­யர்­கள் உய­ரத்­தி­லி­ருந்து வேலை செய்­யவோ கட்­ட­டப் பிரி­வு­களை நகர்த்­தவோ வேண்­டி­ய­தில்லை. இத­னால், அவர்­கள் கீழே விழு­வ­தற்­கான அல்­லது காயம் அடை­வ­தற்­கான அபா­யம் குறை­வாக உள்­ளது.

வேலை­யி­டத்­தில் உற்­பத்­தித்­தி­ற­னை­யும் பாது­காப்­பை­யும் மேம்­படுத்த தான் பயன்­ப­டுத்­தும் புத்­தாக்­க முறையை Teambuild நிறு­வனம் காண்­பித்­தது.

கட்­ட­டப் பிரி­வு­கள் கட்­டு­மானத் தளத்­திற்கு எடுத்­துச் செல்­லப்­படு­வ­தற்கு முன்பு, முன்­வ­டி­வ­மைக்­கப்­பட்ட கட்­ட­டப் பிரி­வு­க­ளைத் தொழிற்­சா­லை­யில் உற்­பத்தி செய்­வ­தில் Teambuild  நிபு­ணத்­து­வம் பெற்­றுள்­ளது.

இத்­த­கைய தொழில்­நுட்­பத் தீர்­வு­கள் ஊழி­யர்­க­ளைப் பாது­காத்­தா­லும், அவற்­றில் முத­லீடு செய்ய சில நிறு­வ­னங்­க­ளி­டம் போது­மான நிதி வசதி இருக்­காது என்று சிங்­கப்­பூர் ஒப்­பந்­த­தா­ரர்­கள் சங்க உறுப்­பி­னர் டேவிட் லியோங் ஒப்புக்­கொண்­டார்.

“கட்­ட­டப் பிரி­வு­களை முன்­வடி­வ­மைப்­ப­தன் மூலம் உய­ரத்­தி­லி­ருந்து வேலை செய்­வ­தைக் குறைப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் குறித்து நிறு­வ­னங்­கள் ஆரா­ய­லாம்,” என்று கூறியுள்ளார்.