Dawson சாலையில் சடலமாக கிடந்த இளம் வயது ஆடவர் – உயரத்தில் இருந்து விழுந்ததாக சந்தேகம்

teen-dead-dawson-road
Singapore Incidents/Instagram

சிங்கப்பூரில் இளம் வயது ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகளை வெளியாகியுள்ளன.

19 வயதுமிக்க அவர், குயின்ஸ்டவுனில் உள்ள Dawson Road HDB பிளாக்கில் இருந்து கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

வெயில் காலம் வந்துருச்சி.. வெப்பத்தில் வாடும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை – MOM வெளியிட்ட அறிக்கையால் மகிழ்ச்சி

இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கள்கிழமை (மே 8) அன்று Dawson சாலையில் உள்ள பிளாக் 89 SkyTerrace@Dawson இல் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சோதித்தில் இறந்த நிலையில் அவர் கிடந்தது உறுதி செய்யப்பட்டது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதில் சதிச்செயல் ஏதும் நடந்ததாக சந்தேகம் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விசாரணைகள் தொடந்த வண்ணம் உள்ளன.