நிற்காமல் சென்ற கார்.. துரத்தி பிடித்த காவல்துறை – உரிமம் இல்லாத ஓட்டுநர் கைது!

Teen driver crashes Punggol
Teen driver crashes Punggol (PHOTO: R Kapil Thevan Peter/FB)

ஆபத்தான முறையில், முறையான ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது மற்றும் போக்குவரத்து தொடர்பான பிற குற்றங்களுக்காக 18 வயது ஆடவர் (ஜன .14)
கைது செய்யப்பட்டார்.

PIE அதிவேக நெடுஞ்சாலை நோக்கி செல்லும் செல்லும் TPE அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல்துறை ரோந்து சென்று கொண்டிருந்தனர், அப்போது வாகனம் வேகமாக வருவதை கண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஐந்தில் இரு ஊழியர்களுக்கு வேலையிட பாலியல் தொல்லை – ஆய்வு

அதனை அடுத்து, சோதனை நடத்துவதற்காக காரை நிறுத்துமாறு அதிகாரிகள் கூறினர். ஆனால், ஓட்டுநர் நிற்காமல் வேகமாக சென்றுள்ளார், பின்னர் அதிகாரிகள் அவரை துரத்த ஆரம்பித்தனர்.

இறுதியில், Edgefield Plainsஇல் சாலையோரத்தில் மோதி அந்த கார் நின்றது, இந்த சம்பவம் அதிகாலை 3:30 மணியளவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டன.

பேஸ்புக் பதிவின் படி, Punggol சென்ட்ரல் அருகே பெரிய சத்தம் கேட்டதாகவும், பின்னர் சம்பவ இடத்தில் காவல்துறை வாகனங்களைப் பார்த்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

வாகனத்தில் வேறு யாராவது இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை

காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தொற்று பாதித்த வெளிநாட்டு ஊழியர்… மற்ற விடுதி ஊழியர்களுடன் தொடர்பு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…