தேக்காவில் திருட்டு… ART கருவிகளைத் திருடியதாக பிடிபட்ட இருவர்!

public-should-not-hoard-art-kits moh

தேக்காவில் உள்ள விரைவு சோதனை நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட இரண்டு பெண்கள் மீது திருட்டு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர்கள் 100க்கும் மேற்பட்ட கோவிட்-19 ART சோதனை கருவிகளை அங்கிருந்து திருடியதாகக் கூறப்படுகிறது.

கட்டுமானத் துறை Work permit ஊழியர்கள் தான் டாப் – அதிகரிக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் வரத்து

இதில், 24 மற்றும் 27 வயதுடைய இரு பெண்கள் மீது நாளை வெள்ளிக்கிழமை (ஏப். 29) நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.

தேக்கா பரிசோதனை நிலையத்தில் இருந்து ART கருவிகள் திருடப்பட்டதாக கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி தகவல் கிடைத்தது என்று செய்திக் குறிப்பில் போலீசார் கூறியுள்ளனர்.

சோதனை நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட இரண்டு பெண்களும், சுமார் 103 ART கருவிகளை முறைகேடாகப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும், அதில் 44 கருவிகளை அவர்கள் இருவரும் இணையத்தின் வழியாக விற்று அது மூலம் லாபம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!