சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் உடல் மலேசியா சென்றது… கண்ணீரில் மிதந்த குடும்பம்!

nagaenthran-dharmalingam-executed malaysia tamil
Malay Mail

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மலேசியர் நாகேந்திரன் கே. தர்மலிங்கத்துக்கு நேற்று (ஏப். 27) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், அவரின் உடல் மலேசியாவின் ஈப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக Malay Mail கூறியுள்ளது.

சிங்கப்பூரில் இறுதியாக தூக்கிலிடப்பட்ட நாகேந்திரன் கே. தர்மலிங்கம்… சட்டம் தன் கடமையை செய்தது!

நேற்று ஏப்., 27 மதியம் 1 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை, 38 சின் மிங் டிரைவில் அவருக்காக இறுதி அஞ்சலி பிராத்தனை கூட்டம் நடைபெற்றது.

அவரது நண்பர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்கள் என பலர் அங்கு இருந்தனர். 100க்கும் மேற்பட்டோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு இன மக்களும் இதில் கலந்துகொண்டனர், ஆனால் அவரின் தாயார் மற்றும் உறவினர்கள் யாரும் அங்கு காணப்படவில்லை.

நாகேந்திரன் தர்மலிங்கம் 34 வயதுமிக்கவர், இவர் கடந்த 2009ஆம் ஆண்டு 42.72 கிராம் எடையுள்ள ஹெராயின் எனும் போதை பொருளை சிங்கப்பூருக்குள் கடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.

அதன் பின்னர் முதன்முதலில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இது தொடர்பான அனைத்து செய்திகளையும் நாம் முன்னர் பதிவிட்டுள்ளோம்: படிக்க 

தான் ஓட்டிய கனரக வாகனம் தனக்கே எமனாய் வந்த சோகம் – தமிழக ஊழியர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்