முதல் முறையாக நெல் அறுவடை செய்த சிங்கப்பூர்!

rice-harvesting-tampines-blk-146
Zheng Zhangxin

சிங்கப்பூரில் முதன்முறையாக உற்பத்தியான நெல் பிப். 12 ஆம் தேதி சிறப்பாக அறுவடை செய்யப்பட்டது.

உணவு விநியோகத்தில் ஏற்படும் அச்சுறுத்தல்களைச் சமாளித்து அதனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது சிங்கப்பூரில் மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூரின் பிரம்மாண்ட TOTO டிரா: S$19.4 மில்லியன் பரிசுத்தொகையை தட்டி சென்ற 8 வெற்றி டிக்கெட்டுகள்!

பிளாக் 146 தெம்பனீஸ் அவென்யூ 5ல் உள்ள உயர் தொழில்நுட்ப பண்ணையில் நெல் அறுவடை இன்று (பிப் 12) நடைபெற்றது.

இதனை வரவேற்று பேசிய தெம்பனீஸ் டவுன் கவுன்சிலின் தலைவர் திருமதி செங் லி ஹுய்: “சிங்கப்பூர் உணவு இறக்குமதியை பெரிதும் நம்பியுள்ளது” என்றார்.

Zheng Zhangxin

மேலும், சிங்கப்பூர் உணவு விநியோகத்தில் அபாயத்தையும் எதிர்கொள்கிறது என்று அவர் கூறினார்.

உயர் தொழில்நுட்ப பண்ணையின் Netatech நிறுவனம், இந்த நெல் வளர்ப்பு என்பது Precision Drip Irrigation எனப்படும் முறையில் வளர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

வயல்களில் வளரும் நெல் எடுத்துக்கொள்ளும் தண்ணீரின் அளவை விட, இந்த முறையில் குறைவாகவே தண்ணீர் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

“மற்றவர்களை வாழ வைப்பது நம் ரத்தத்தில் ஊறியது” – சிங்கப்பூரில் தன் சொந்த முயற்சியில் இயலாதோருக்கு உதவி வரும் தமிழ் சிறுமி!