யம்மாடி…200 ஆடு…2500கி பிரியாணி: மதுரையில் பிரம்மாண்ட பிரியாணி திருவிழா – சிறப்பித்த சிங்கப்பூர் தமிழர்கள்!

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் திருமங்கலம்-வடக்கம்பட்டி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரியாணி திருவிழாவில் சிங்கப்பூரில் இருந்தும் தமிழர்கள் வந்து கலந்துகொண்டனர்.

அந்த பகுதியில் வெகு விமர்சியாக கொண்டாடப்படும் இந்த பிரியாணி திருவிழா 86 ஆண்டாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இது 87வது ஆண்டாகும்.

இந்திய ஊழியர்கள் உட்பட சில வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு Work permit அனுமதி!

அங்கு அமைந்துள்ள முனியாண்டி கோவிலில் நடைபெற்ற இந்த பிரியாணி திருவிழாவில் சுமார் 2500 கிலோ பிரியாணி சாமிக்கு படைக்கப்பட்டு, பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வெகுவிமர்சியான திருவிழாவிற்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்து இந்து பக்தர்கள் கலந்துகொள்வர்.

அதோடு மட்டுமல்லாமல், சிங்கப்பூரில் இருந்தும் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்துபவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதில் பக்தர்கள் தாங்கள் வேண்டிக்கொண்டு காணிக்கையாக கொடுத்த 200 ஆடுகள் மற்றும் 300க்கும் அதிக கோழிகள் பலியிடப்பட்டது.

அதில், சுமார் 2500 கிலோ பிரியாணி அரிசி கொண்டு பிரியாணி தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.

சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் யாராவது இந்த திருவிழாவிற்கு சென்றதுண்டா… சென்றிருந்தால் கமெண்ட் செய்யுங்கள்.

“நாட்டின் எல்லைகளை விரைவில் திறக்க போறோம்” – கிரீன் சிக்னல் கொடுத்த நாடு