“பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிங்கப்பூர்”… தங்கம் வென்று சாதனை படைத்த சிங்கப்பூர் ஜோடி!

Photo: Ruffntuff

கலப்பு இரட்டையர் பாட்மிண்டன் பிரிவில் சிங்கப்பூர், இங்கிலாந்து அணியை நேர் செட்களில் வெற்றபெற்று தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

டெர்ரி ஒய்கே ஹீ மற்றும் ஜெசிகா டான் வெய் ஹை ஆகியோர் சிங்கப்பூருக்காக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

சிங்கப்பூர் தேசிய தினம்: வாணவேடிக்கைகளை எங்கே காணலாம்? நேரம் என்ன? யாருக்கு அனுமதி – முழு ரிப்போர்ட்

இங்கிலாந்தின் மார்கஸ் எல்லிஸ் மற்றும் லாரன் ஸ்மித் ஆகியோருக்கு எதிரான போட்டியில் அவர்கள் இருவரும் முதலிடம் பிடித்தனர்.

அதாவது, 21-16 மற்றும் 21-15 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் ஜோடி அபாரமாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கள் வென்றது தான் சாதனையாக இருந்தது. தற்போது காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வெல்வது இதுவே முதன் முறையாகும்.

“நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் – 20 ஆண்டுகளுக்குப் பிறகு கலப்பு இரட்டையர் பிரிவில் எங்களின் முதல் தங்கப் பதக்கம் இது” என்று டெர்ரி மகிழ்ச்சியுடன் கூறினார்.

“மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் வேலையை இழந்தனர்” – புதிதாக 4,000 பேர் வேலைகளில் சேர்ப்பு!