‘தை அமாவாசை’- ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான அறிவிப்பு!

Photo: Sri Sivan Temple

 

வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி அன்று தை அமாவாசையொட்டி (Thai Amavasai), ஸ்ரீ சிவன் கோயிலுக்கு (Sri Sivan Temple) செல்லும் பக்தர்களுக்கான முக்கிய அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எவ்வளவு முதலீடுகளைச் செய்துள்ளது தெரியுமா?

இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board- ‘HEB’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தை அமாவாசைத் தினமான வரும் பிப்ரவரி 09- ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தர்ப்பணம் கொடுக்க விரும்பும் பக்தர்கள் கோயிலின் இணையப் பக்கத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும். இணையம் வழி முன்பதிவு செய்யாமல் அந்நாளில் நேரடியாக கோயிலுக்கு வந்து தர்ப்பணம் சீட்டை வாங்க முடியாது.

https://bit.ly/thaiamavasai2023 என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான சீட்டை கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிபாட்டு நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன் கோயிலை சென்றடைந்தால் போதுமானது. கோயிலில் பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதை வழியே நிற்காமல் தொடர்ந்து நடந்தவாறு வழிபாடு முடிந்ததும், கோயில் வளாகத்திலிருந்து புறப்படும்படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கோயில் பிரசாதத்தை கோயில் வளாகத்தில் உண்ண வேண்டாம்.

பெண்களின் மறைவு பகுதிகளை காணொளி எடுத்து சிக்கி கொண்ட ஓட்டுநர்

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 67434566 என்ற கோயில் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.