தை அமாவாசை- ஸ்ரீ சிவன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!

Photo: Sri Sivan Temple

தை அமாவாசையையொட்டி, ஸ்ரீ சிவன் கோயிலுக்கு (Sri Sivan Temple) வரும் பக்தர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை இந்து அறக்கட்டளை வாரியம் (Hindu Endowments Board) வெளியிட்டுள்ளது.

“பேருந்து சேவை 35 புதிய பாதைக்கு திருப்பி விடப்படும்”- எஸ்பிஎஸ் டிரான்ஸிட் அறிவிப்பு!

அதன்படி, தை அமாவாசை நாளான ஜனவரி 31- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று ஸ்ரீ சிவன் கோயிலுக்கு பக்தர்கள் பின்வரும் நெறிமுறைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து பக்தர்களும் தர்ப்பணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம்; நேரடி பதிவு கிடையாது.

உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக கோயிலுக்கு வர வேண்டும். பக்தர்கள் பாதையில் நிற்காமல் நடந்து செல்லவும், தங்கள் பிரார்த்தனைகளை முடித்தவுடன் உடனடியாக கோயில் வளாகத்தை விட்டு வெளியேறவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் சிங்கப்பூர் இதுவரை எந்த அளவுக்குப் பங்களித்துள்ளது?- நாடாளுமன்றத்தில் பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர்!

கோயிலின் அருகாமையிலும் அதைச் சுற்றியும் பிரசாதம் சாப்பிடக் கூடாது. கோயிலில் நடைபெறும் பூஜைகள் உட்பட அனைத்து நேரங்களிலும் பக்தர்கள் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும். கோயிலுக்குள் நுழைவதற்கு ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டக் காண்பிக்க வேண்டும். அதன் பின்னரே, கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

நடைமுறையில் உள்ள பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளைப் பக்தர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். தை அமாவாசைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று (10/01/2022) தொடங்கியது. https://bit.ly/thaiamavasai என்ற இணையதள பக்கத்திற்கு சென்று முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 67434566 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.